எம்.எம்.உவைஸ். பாணந்துறை: எம்.எம்.உவைஸ், ‘மர்கஸி’, ஹேனமுல்லை, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 10: அல்பியன் அச்சகம், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை, மருதானை).
25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 11.5 சமீ.
1976 ஜுன் 8ஆம் 9ஆம் திகதிகளில் சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.ம.மு. உவைஸ் (15.01.1922 -25.3.1996) பாணந்துறையில் உள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் மகுமூது லெப்பை, சைனம்பு நாச்சியார் ஆகியோருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். பாணந்துறை 894.8(621) இஸ்லாமியத் தமிழ், அரபுத்தமிழ் இலக்கியம் அர்ச். யோவான் கல்லூரியில் சேர்ந்து உயர்தரப் படிப்பை முடித்து 1946 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சுவாமி விபுலாநந்தரின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழைச் சிறப்புப் பாடமாகவும் சிங்களத்தை உப பாடமாகவும் கற்றார். விபுலானந்தரின் மறைவைத் தொடர்ந்து பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் உதவியுடன் முதுமாணிப் பட்டமும் பெற்றார். ‘தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்பது இவரது முதுகலைமாணிப்பட்ட ஆய்வேடு ஆகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2589).