12866 – பல்கலைச் செல்வி இராஜம் புஷ்பவனம் படைப்புகள்.

ஷெல்லிதாசன், நிர்மலாதேவி கோவைநந்தன் (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ்: ரேவதி மோகன், ஆனந்தரஜனி வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xviii, 205 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-52563-2-2.

ஈழத்துப் பெண் எழுத்தாளர் வரிசையில் ஆளுமைமிக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பல்கலைச்செல்வி என். இராஜம் புஷ்பவனம். 1994இல் அமரராகிவிட்ட இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாக இந்நூல் உருவாகியுள்ளது. கவிதை, சிறுகதை, நாடகம், வானொலி மெல்லிசை, கருத்தோவியப் படைப்பாளி எனப் பல்துறை ஆளுமைமிக்கவராகத் திகழ்ந்த இவர் ‘சுமதி எங்கே’ என்ற திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாகவும் இருந்தவர். இத்தொகுப்பில் இவர் எழுதிய ஒன்பது சிறுகதைகள் (ஆத்மபேதம், அம்மா, அவன் பெரியவன், ஜீன்பண்டா, குடிப்பேதம், சுபீட்சத்தை நோக்கி, விடிவு வரும், செம்பாட்டு மண், புனிதங்கள் போற்றப்படும்), பன்னிரு கவிதைகள் (அமைதிகாண நீ வருவாய், அறிஞர் அண்ணா வாழ்த்துப்பா, இனிதாய் வாழ்வோம், எமைவிட்டு ஏனையா போனீர்?, கீதம் மீட்டுவார், நீல நதியின் .., என்றும் இனிதாய் வாழ, றோட்டில் ஆடு, செந்தமிழ்த் தாயே வணக்கம், சிற்றருவி சலசலக்க, வீணையின் நாதம், வித்தகர் விபுலாநந்தர்), எட்டு நாடகங்கள் (ஆஞ்சநேயர், ஜோதீஸ்ரூபன், காளமேகம், மலையுச்சிச் சாமியார், நல்ல மாணாக்கன், நேர்மை தந்த பரிசு, பிரியம்வதா, தாமரைக்குமரி), இரு கட்டுரைகள் (ஆஞ்சநேயர், இளஞ்சிறார்களின் எதிர்காலம், பெண்களும் பிரச்சினைகளும்) ஆகியவை அடங்கியுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62100).

ஏனைய பதிவுகள்