12522 – வர்த்தகவியல்: தொழில் முன்னிலைப் பாடநெறி: ஒன்பதாம் தரம்.

வே.அழகேசன், அ.ஸ்ரீஸ்கந்தராசா, யாழ்ப்பாணம்: வே.அழகேசன், அ.ஸ்ரீஸ்கந்தராசா, 2வது பதிப்பு, மார்ச் 1977, 1வது பதிப்பு, ஜுன் 1975. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம்).

(4), 248 பக்கம், விலை: ரூபா 9.00, அளவு: 20×13.5 சமீ.

இலங்கையில் 1972இல் அடிப்படை மாற்றத்தையுடைய கல்விச் சீர்திருத்தங்களைப் புகுத்தினர். இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகத் தொழில் முன்னிலைப் பாடநெறிகள் புகுத்தப்பட்டன. இதில் வர்த்தவியலும் ஒன்றாகும். இந்நூல், வர்த்தகவியலின் ஒன்பதாம் தரத்துக்குரிய பொருளாதார அடிப்படையும் வர்த்தகமும், இலங்கைப் பொருளாதாரமும் ஏனைய நாடுகளின் பொருளாதாரமும், சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம், உள்நாட்டு வியாபாரம், வியாபார அமைப்பு, கூட்டுறவு இயக்கம், பணமும் வங்கித் தொழிலும், விளம்பரம், வியாபாரத் தகவல் பரிமாறல், போக்குவரத்து, வெளிநாட்டு வர்த்தகம், பண்டக சாலையும் களஞ்சியமும், காப்புறுதி ஆகிய 14 பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் மூன்று மீட்டல் பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24721).

ஏனைய பதிவுகள்