12536 – சூடாமணி நிகண்டு பதினொராவது பன்னிரண்டாவது (மூலமும் உரையும்).

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், நல்லூர், 5வது பதிப்பு, 1925, முதலாவது பதிப்பு விபரமில்லை. (சென்னை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சூளை).

82+42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12 சமீ.

எதுகையும் மோனையும் கவிதையின் எழிலுக்கும் ஏற்றத்துக்கும் மட்டும் காரணமாக நிற்கவில்லை. நெஞ்சம் கவிதைகளை மறக்காமல் இருப்பதற்கும் எதுகைத் தொடரும் மோனைத் தொடரும் பெருந்துணையாக விளங்குகின்றன.இவற்றைத் துணையாகக் கொண்டு நம் முன்னோர்கள் நிகண்டுகளை உருவாக்கினர். தமிழின் சொல்வளத்தைப் பாதுகாக்கும் வங்கிகளாக நிகண்டுகள் விளங்கி வந்துள்ளன. ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள், ஒரு பொருளுக்கு எத்தனை சொல் என்று வியக்கவைக்கும் இந்நிகண்டுகள் நல்ல தமிழ்ச் சொற்களை காலம் காலமாக எமக்குக் காவித்தந்துள்ளன. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பித்த சூடாமணி நிகண்டு 12 பிரிவுகளில் தேவப்பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி, விலங்கின் பெயர்த் தொகுதி, மரப் பெயர்த் தொகுதி, இடப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த் தொகுதி, ஆகியவற்றைத் தொகுத்திருந்தார். இந்நூல் ஒருசொற்பல்பொருட் பெயர்தொகுதி, பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி ஆகிய பின்னைய இரு இயல்களை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26774).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

14108 அனுமந்த மகரந்தம் ரம்பொடை வெவண்டன்; மலையுறை அருள் மிகு ஸ்ரீ பக்த அனுமன் ஆலய மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் ;.

மலர்க்குழு. கொழும்பு 4: இலங்கை சின்மய மிஷன், 21/1, டி கிரெட்சர் பிளேஸ், இணை வெளியீடு, ரம்பொடை: ஸ்ரீ பக்த அனுமன் ஆலயம், வெவண்டன் மலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கொழும்பு 13:

12525 – மஹாளய சிராத்தம்.

நீர்வேலி தி. நடனசபாபதி சர்மா. ஜேர்மனி: ஸாயிநாதம், போகும், 1வது பதிப்பு, 1998. (Germany: Sainatham, Bochumerstr -138, 44866 Bochum)-138, 44866 Bochum). x, (2+10), 91 பக்கம், விலை: ரூபா 150.,

12060 – வழிபாடு.

ப.கணபதிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: அமரர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளை நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் ஓப்செட் பிரின்டிங், நல்லூர்). vi, 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. தாம்

Lottozahlen Vom 17 072021

Content Online Spielbank 77jackpot Kasino Echtgeld Pro 2024 Eurojackpot Gewinnzahlen Dies Kasino Hat Angewandten Besseren Prämie? Glücksspiel­aufsichts­institut der Veranlassung Rauschen­Kastell LOTTO Gesmbh ist und bleibt