12551 – தமிழ்: ஆண்டு 5.

இ.விசாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1986, 1வது பதிப்பு, 1985. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு).

viii, 205 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூலில் மொழிப்பயிற்சியை வளர்ப்பதற்காக 27 உரைநடைப் பாடங்களையும் ஒன்பது செய்யுட் பாடங்களையும் ஐந்து பகுதிகளாக மொழிப்பயிற்சிகளையும் தந்துள்ளனர். சின்ன மகளின் சின்னக் கைகள், புத்தாண்டு பிறந்தது, தேசிய விளையாட்டு விழா, அம்மா நான் விளையாடப் போறேன், உணவு அறிந்து உண், நாங்கள் உடைகள், துருக்கித் தொப்பி, உலகநீதி, உழைக்கும் கரங்கள், மைதானம் பிறந்தது, கமமும் புலமும், பாடுபடுபவர்க்கே, சித்திரக் குன்றம், புதையல் யாருக்கு, கடதாசி பேசுகிறது, நாங்களும் செய்வோம், நோன்புப் பெருநாள், மகிழ்ந்தான் பையன், இராமன், சின்னவன் வென்றான், புதிய அத்திசூடி, பொய் சொல்லமாட்டேன், வளரும் பயிரை முளையிலே தெரியும், யாத்திரை, கடன்காரன், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒரு தீர்ப்பு, மணிமொழி, துடிப்பான சிறுவன், சிவப்பு ரோசா, புதுவருடம் பிறந்த கதை, கைகொடுப்போம், கொடுத்தார்க்குக் குறைவில்லை, மேன்மக்கள், கதிர்காமம், எங்கள் நாடு ஆகிய தலைப்புகளில் இவை 36 பாடங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் வெளியீட்டுக்கான தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளராக வே.வல்லிபுரம் அவர்கள் பணியாற்றியிருக்கிறார். நூலாக்கக் குழுவில் இ.விசாகலிங்கம், முக்தார் ஏ. முஹம்மது, இராஜேஸ்வரி செல்வரத்தினம், கிருஷ்ணகுமாரி நடராஜா, ஏ.எச். எம். யூசுப், பவானி பாலசிங்கம், எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24756).

ஏனைய பதிவுகள்

casino de fiesta

Jeux de casino en ligne Online Casino in Las Vegas Casino de fiesta La plateforme met en garde les joueurs contre leur responsabilité dans le

12409 – சிந்தனை (தொகுதிVIII, இதழ் 1,3).

இராசரத்தினம் சிவசந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி). (8), 105 பக்கம், விலை: