12562 – தமிழ் மலர் நான்காம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1970, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

(14), 206 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×17 சமீ.

முதலாம் பருவத்துக்குரிய பத்து பாடங்களாக எனது ஊர், காகமும் மானும் நரியும், பனைமரம் (பாட்டு), ஒற்றுமை, ஆறுமுக நாவலர், மனக்கோட்டை (பாட்டு), வீட்டில் வளரும் பிராணிகள், ஒளவையாரும் குடியானவனும், நல்வழி -1, நல்வழி-2 ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பருவத்துக்குரிய பன்னிரு பாடங்களாக, உண்மையின் உயர்வு, எங்கள் நாடு (பாடல்), காகிதத் தொழிற்சாலை, தயாளன், நெல்லைநாத முதலியார், நட்பின் வெற்றி (நாடகம்), தாய்சொல்லைத் தட்டாதே (நாடகம்), நான் யார்?, சுவிட்சர்லாந்து, அறிஞர் சித்திலெப்பை, நல்வழி 3, நல்வழி 4 ஆகியவை இடம்பெற்றுள்ளன. மூன்றாம் பருவத்துக்குரிய பத்து பாடங்களாக தமிழ்மொழி, சேனாதிராச முதலியார், பாரி, பொன்மொழிகள்-பழமொழிகள்-விடுகதைகள், சேர் ஐசாக் நியூட்டன், புத்திமான் பலவான் (பாட்டு), கமத்தொழில், சிந்துபாத்து, தனிப்பாடல்கள், நன்னெறி ஆகியவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27474).

ஏனைய பதிவுகள்

12622 – போசாக்குக் கைந்நூல்.

. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்). கொழும்பு: கொள்கை திட்டமிடல், அமுலாக்கல் அமைச்சு, சௌக்கிய அமைச்சு, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு: குணரத்ன ஓப்செட் லிமிட்டெட்). (4), 101 பக்கம், விலை: