16042 சிக்மன் பிராய்டின் கனவுகளின் விளக்கம்.

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (சென்னை: சிவம்ஸ்).

126 பக்கம், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 18×12.5 சமீ.

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud 06.05.1856-23.09.1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றவர். உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவற்றின் தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர். இந்நூல் அவரது கனவுகள் தொடர்பான நூலின் கருத்துக்களை தமிழ் வாசகருக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகின்றது. சோதிடம் கூறும் கனவின் பலன், சிக்மன் பிராய்டு, கனவின் வரலாறு, விருப்பு- நிறைவேற்றல், கனவுகளின் செயல்கள் பற்றிய கோட்பாடு, கனவுகளை விளக்கும் முறை, கனவுகளின் உருத் திரிபு, கனவுகளின் உட்பொருளும் மூலமும், வகைமாதிரிக் கனவுகள், கனவுத் தொழில், பின்னடைவும் மீட்சியும், முக்கிய கனவுகளும் அவற்றின் விளக்கங்களும், கனவுகள் பற்றிய சில முக்கிய குறிப்புகள் ஆகிய 13 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Mr Bet Test

Content Aztec gold Casino: Other Bonus Offers and Promos The Importance Of Bonuses Professionelle Kundenbetreuung und MrBet Support rund um die Uhr. Einer der wichtigsten