16052 சீர்மியத்தில் சிறப்பு முறைகள்: உளவியல் சிகிச்சைகள்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பளை: சோலைக்குயில் அவைக்காற்றுக் கள வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).

xii, 204 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-5407-01-9.

மனித வாழ்வை மேம்படுத்தும் நோக்குடன் வெளிவரும் மனம் சார்ந்த உளநூல் இது. Advanced Psycho social therapies எனப்படும் சீர்மியத்தில் சிறப்பு முறைகள் பற்றி இந்நூல் பேசுகின்றது.  சீர்மியம் என்றால் என்ன?, விசேட சிகிச்சை முறைகள், அறிகைச் சிகிச்சை, ஏற்றுக்கொண்டு பொறுப்புடனிருத்தல் சிகிச்சை, தர்க்கமுறையுடன் கூடிய நடத்தைச் சிகிச்சை, உன்னிப்பாயிருத்தலை அடியொற்றிய அறிகைச் சிகிச்சை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16684 நிஜங்கள்.

பார்த்திபன். மேற்கு ஜேர்மனி: Sud Asien Buro, Kiefernatr 45, 5600, Wuppertal 2, 1வது பதிப்பு, மார்ச் 1986. (கல்லச்சுப் பிரதி). 40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×15 சமீ.