சிறப்பு மலர்க் குழு. கொழும்பு: அகில இலங்கை இந்து மாமன்றம், 1வது பதிப்பு, மே 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
xvi, 276 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 19 சமீ.
செஞ்சொற்செல்வரின் வாழ்வும் பணிகளும், செஞ்சொற்செல்வரின் சிறப்புகளும் பாராட்டுகளும், செஞ்சொற்செல்வரின் ஆக்கங்களும் சொற்பொழிவுகளும், செஞ்சொற்செல்வரின் நிகழ்வுகளும் நினைவுகளும் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் ஆறு.திருமுருகன் அவர்களின் வாழ்வும் பணிகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர் கந்தையா ஆறுமுகம்-சரஸ்வதி தம்பதியினருக்கு 28.5.1961இல் மகனாகப் பிறந்தவர் திருமுருகன். சுன்னாகம் இராமநாதன் இந்துக் கல்லூரி, யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தன் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகித் தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியப் பயிற்சி பெற்ற இவர் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் 1989இல் ஆசிரியத் தொழிலை ஆரம்பித்தார். 1991இல் நல்லாசிரியர் விருதினைப்பெற்ற இவர் 1993இல் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு மாற்றலாகி அங்கு பணியாற்றி 16.3.2008 முதல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். சமூக சேவையாளராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் அறியப்பெற்றவர். தெல்லிப்பழையில் துர்க்காதேவி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சபைத் தலைவராகவும், துர்க்காபுர மகளிர் இல்லத்தின் தலைவராகவும் பணியாற்றும் இவர் சிவபூமி அறக்கட்டளையின் தாபகராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50357).