16149 பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அண்ணாமலையார் மீது பொழிந்த அருட்பாடல்கள்.

ஸ்ரீ ரமண மகரிஷி (மூலம்), பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பீடம் (தொகுப்பாசிரியர்கள்).  கொழும்பு 6: பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பீடம், தலைமையகம், இல. 49, பிரட்றிகா வீதி, 3வது பதிப்பு, ஜனவரி 2015, 1வது பதிப்பு, 2012, 2வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.

கொழும்பு பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி பீடம் 03.01.2015 அன்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 135ஆவது ஜெயந்தி தினத்தைக் கொண்டாடிய வேளையில் இந்நூலும் வெளியிடப்பட்டது. வாழ்த்துரை, அணிந்துரை ஆகியவற்றுடன், அருணாசல தல மகிமை, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி சரிதம், குருவணக்கம், விநாயக துதி, பகவான் ஸ்ரீ ரமண ஸத்குரு, பிரதோஷ விரதப் பாடல்கள், ஸ்ரீ அருணாசல பஞ்சரத்தினம், அண்ணாமலையார் திருநாமங்கள், மஹா பைரவர் வழிபாடு, ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை பற்றி, ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை, தியானப் பாட்டு, ஆன்மீக வழிபாட்டு ஒழுங்கு, நான் யார்? (ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி வினா-விடை வடிவம்), கிரிவலத்தின் 108 அற்புத தரிசனங்களும் அதற்கான பலன்களும், கிரிவலப் பலன்கள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேசம் – நீதான் யாரோ?, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் பிரம்மாஸ்திரம், மகாலிங்க சுவாமிகள்- திருவிடைமருதூர் தோச பரிகாரங்கள் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Crocodopolis Status Opinion 2024

Blogs Crocodopolis $step one put: Do you Reside in An excellent bona-fide Money To try out County?: go now Crocodopolis On line Reputation In the