16194 21ம் நூற்றாண்டில் மலையகப் பெண்கள் : சவால்களும் சந்தர்ப்பங்களும்.

புளொரிடா சிமியோன் (மூலம்), தை.தனராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: எம்.வாமதேவன், அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, மனிங் டவுன், மங்கள வீதி, 1வது பதிப்பு, செம்டெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15சமீ.

08.09.2018 அன்று நிகழ்த்தப்பட்ட அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த பத்தொன்பதாவது நினைவுப் பேருரை. இவ்வுரையை நிகழ்த்திய செல்வி புளொரிடா சிமியோன் பதுளை மாவட்டத்தின் மடுல்சீமை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பூண்டுலோயா கந்தசாமி மத்திய கல்லூரியிலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியலை சிறப்புப் பாடமாகக் கற்று முதல் வகுப்பில் சித்தியடைந்து தற்போது அதே பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். தமிழ்ப் பெண்களின் குறிப்பாக பெருந்தோட்டப் பெண்களின் அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினை தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார்.

ஏனைய பதிவுகள்

14333 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை.

இலங்கை அரசாங்கம். கொழும்பு 5: அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டு அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொடை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்,