16196 நிலைமாறுகின்ற வாழ்க்கை.

சேபாலி கோட்டேகொட, ரமணி ஜயசுந்தர, சுமிக்கா பெரேரா, பத்மா அத்தபத்து (ஆங்கில மூலம்), ரொபேர்ட் வேதநாயகம், குகநிதி குகநேசன் (தமிழாக்கம்). கொழும்பு 8: பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு, 56/1, சரசவி ஒழுங்கை, காசல் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 7-100 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-1170-13-6.

நாடு திரும்பிய இலங்கைப் புலம்பெயர் பெண் தொழிலாளருக்குச் செவிமடுத்தல் என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதுவாகும். இவ்வாய்வு, நாடு திரும்பிய முப்பது புலம்பெயர் பெண்களில் கவனஞ்செலுத்துகின்றது. திரும்பிவரும் பெண் தொழிலாளர் மீண்டும் நிலையான வாழ்க்கையை மேற்கொள்வதிலும் சமூகத்துடன் ஒருங்கிணைவதிலும் உள்ள பிரச்சினைகளையும் வாய்ப்புக்களையும் இந்த ஆய்வு இனங்காண முயற்சிசெய்கிறது. திரும்பி வருதலும் மீள் ஒருங்கிணைப்பும் அவர்களின் சொந்தப் பண்புகளையும் அவர்களின் குடும்பங்களினதும் சன சமூகங்களினதும் சமூக-பொருளாதாரச் சூழ்நிலைகளையும் பொறுத்துத் திரும்பி வருபவர்களின் வெவ்வேறு குழுக்களுக்கிடையே பரந்தளவில் வேறுபடுகின்றதென்ற முடிபை இந்த ஆய்வு கண்டடைந்துள்ளது. திரும்பிவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் மீள் ஒருங்கிணைப்புப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு முனைப்படுத்திக் காட்டுகின்றது. அறிமுகம்-இலங்கையிலிருந்து கடல் கடந்த தொழிலுக்கான புலப்பெயர்வு/ நாடு திரும்பிய 30 புலம்பெயர் பெண் தொழிலாளர்/ பிரதம வருமானம் ஈட்டுநராக ஒருவர் தம்மையே இனம்காணுதல்/ குடும்பங்களில் பால்நிலைத் தொடர்புகளை மீளத் தீர்மானித்தல்/ முடிபுகள் ஆகிய பிரதானமான ஐந்து பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ள இவ்வாய்வறிக்கையின் இறுதியில் கதைகள், கேள்விக்கொத்து, வரைபடங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள் என்பனவும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்