16199 நிவேதினி : பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை : இதழ் 17 (2017).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ., ISSN: 1391-0027.

இதழாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் இவ்விதழில் இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம்-சட்ட மறுமொழி (கோசலை மதன்), தீவிரவாதப் பெண்ணிலைவாதமும் நடைமுறை சாத்தியப்பாடும் (நிரஞ்சினி திரவியராசா), பெண் கலைஞர்களின் கலை வெளிப்பாடுகளில் அகவன் மகளுக்கான இடம்: சங்க இலக்கியங்களை மையப்படுத்திய ஆய்வு (வானதி பகீரதன்), பெண்நிலை நோக்கில் ஒரு கட்டவிழ்ப்பு முயற்சி (சந்திரசேகரன் சசிதரன்), அப்போதைய சமூக மையத்தில் பௌத்த-இந்து-முஸ்லிம் பெண் சமயக் குரவர்களின் சமூகநிலையும் எதிர்நிலை நோக்கும் (லறீனா அப்துல் ஹக்), கருகிய கவிதை (சுகுமாரன்), பெண்களின் சுயம் அறிதல் (எம்.எஸ்.தேவகௌரி), வீட்டிலிருந்து விரியும் வெளிகள்- ஈழத்துப் பெண்களின் தமிழ்க் கவிதைகளை முன்வைத்து (எஸ்.ஆன் யாழினி) ஆகிய எட்டு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. செல்வி திருச்சந்திரனை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இவ்விதழின் உதவி ஆசிரியராக ஜெயமாலா சிவச்செல்வம் இயங்கியுள்ளார். ஆசிரியர் குழுவில், தேவகௌரி சுரேந்திரன், மகேஸ்வரி வைரமுத்து, நீலா தயாபரன், ஆனந்தி சண்முகசுந்தரம், வசந்தி தயாபரன், லறீனா ஹக், வ.மகேஸ்வரன், எஸ்.யோகராஜா, நதீரா மரியசந்தனம் ஆகியோர் இயங்குகின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67873).

ஏனைய பதிவுகள்