16201 நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை : இதழ் 19 (2020-2021).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6 : பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(6), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ., ISSN: 1391-0027.

இதழாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் இவ்விதழில் ஆறு கட்டுரைகளும் ஒரு கவிதையும், நிவேதினி பற்றிய மதிப்புரையும் இடம்பெற்றுள்ளன. கல்வி, சட்டம், திரைப்படம், ஒரு மாற்றுப் பெண் குரல் ஆகிய கருப்பொருள்களை இவ்வாக்கங்கள் கொண்டுள்ளன. ஆண்மைய தாழ்வு மனப்பான்மை/சிக்கல் (செல்வி திருச்சந்திரன்), தேசவழமைச் சட்டத்தின் கீழான ‘கணவனது திருமண அதிகாரம்” தமிழர்களின் உள்ளார்ந்த வழக்காற்று முறையாகக் கொள்ளப்படவேண்டியதா? (புராதனி மதனரஞ்சன்), பெண் சிறுவரது கல்வியில் பொருளாதாரம் ஏற்படுத்தும் தாக்கங்கள்: மட்டக்களப்பு மாவட்ட படுவான்கரை கிராமிய சமூகங்களை மையமாகக் கொண்ட சமூகவியல் ஆய்வு (பகீரதி மோசேஸ்), அரவாணிகள் (நடராஜா பார்த்தீபன்), ஒரு கைம்பெண் கவிதை, சபிகா சுமர்: சமூக அசைவாக்கமே எனது திரைப்படத்தின் நோக்கம் (ஜி.டி.கேதாரநாதன்), அஸ்மா பர்லாஸ்: ஒரு மாற்றுப் பெண் குரல் (லறீனா ஹக்), நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை- ஒரு மதிப்புரை (சோ.சந்திரசேகரன்) ஆகிய தலைப்புகளில் இவ்வாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. செல்வி திருச்சந்திரனை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இவ்விதழின் உதவி ஆசிரியராக ஜெயமாலா சிவச்செல்வம் இயங்கியுள்ளார். ஆசிரியர் குழுவில், தேவகௌரி சுரேந்திரன், வசந்தி தயாபரன், லறீனா ஹக், வ.மகேஸ்வரன், எஸ்.யோகராஜா ஆகியோர் இயங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்