16202 அரிக்கன் லாம்பு : ஒரு திருநங்கையின் வாழ்க்கைப் பயணம்.

ஈழநிலா. கனடா: படைப்பாளிகள் உலகம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

xii, 163 பக்கம், விலை: ரூபா 780., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5786-08-4.

மூன்றாம் பாலினம் என விஞ்ஞான பூர்வ அர்த்தமற்ற ஒரு வகைக்குள் நம்மால் சுருக்கப்படும் சகோதரர்களின் வலியை, வனப்பை, அழுகையை, அவலத்தை, அறச் சீற்றத்தை, அரிக்கன்லாம்பு எமக்குத் தன் அரைகுறை வெளிச்சத்தில் முழுமையிட எத்தனிக்கின்றது. அரிக்கன் லாம்பு இலங்கையில் தமிழ் பேசும் ஒரு திருநங்கையின் தன்வரலாறு கூறும் நூல்;. சமூகத்தின் ஒடுக்கு முறைகள், பாலியல் சுரண்டல்கள் தன்னை பெண்ணாக பரிணமித்துக் கொள்ளலில் உண்டான வலிகள், மதங்களின் சீண்டல்கள், தன் குறியினை அறுத்து பெண்ணாக புதுப் பிறப்படைதலில் உண்டான புதுமையான சடங்குகள் என்று ஒரு மாறுபட்ட உலகை காண்பிக்கும் இந்நூல் ஒரு திருநங்கையின் உண்மை முகத்தை கண்டு கொள்ள உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு வலியின் சத்திய வாக்குமூலமாகவுள்ள அரிக்கன் லாம்பின் வெளிச்சமும் அது களைய எத்தனிக்கும் இருளும் ஒன்றும் புதிதல்ல. இருந்தும் அதிகம் கூர்ந்து பார்க்காத, நினைக்காத புதிய உலகமொன்றின் தரிசிப்பை ஈழநிலாவின் அரிக்கன்லாம்பு வாசகருக்கு வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்