வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ. கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: சீ.கோபாலசிங்கம், விபுலம் வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
(3), 41 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
2004 டிசம்பர் 26இல் நிகழ்ந்த இயற்கை அநர்த்தமான சுனாமிப் பேரழிவு தொடர்பான மீள்பார்வையே இந்நூலாகும். சுனாமி ஓர் மீள் பார்வை, கடற்கோள்கள், புவி நடுக்கம் (நில அதிர்வு), உருவாக்கத் தன்மை, அழிவுத் தன்மை, மோதுகைத் தன்மை, புவி நடுக்க காரணிகள், புவிநடுக்க வலயங்கள், புவிநடுக்க அனர்த்தங்கள், இலங்கைக்கான புவித்தகடு, சுனாமி, சுனாமியின் உருவாக்கம், பூமியதிர்ச்சியினால் ஏற்படும் சுனாமி, நிலச்சரிவுகள் எரிமலை வெடிப்புக்கள் விண்வெளிப் பொருட்களால் உருவாகும் சுனாமி, சுனாமியின் கரையை நோக்கிய பயணம், வரலாற்றில் குறிப்பிடப்படும் சுனாமிகள், நிலநடுக்க உணர் கருவிகளும் ரீச்டர் அளவுத் திட்டம், சுனாமி 26.12.2004, சுனாமி அலை வந்து சேர எடுத்துக் கொண்ட நேரம், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, சுனாமியால் புவி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், சுனாமி ஆபத்தை தடுக்க முடியுமா?, மீளாய்வு, எடுக்கப்படவேண்டிய உடனடி நடவடிக்கைகள், சான்றுகள் ஆகிய தலைப்புகளின்கீழ் சுனாமி பற்றிய பல்வேறு தகவல்கள் இவ்வறிமுக நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவ்விலவச வெளியீடு மட்டக்களப்பு விபுலம் வெளியீட்டு வரிசையில் 12ஆவது நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35905. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004396).