12615 – புதிய க.பொ.த. உயர்தர விலங்கியல் பகுதி IV: ஒப்பீட்டு உடலமைப்பியலும் உடற்றொழிலியலும்: கரப்பான்-தேரை-மனிதன்.

எஸ்.செல்வநாயகம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி வீதி).

(4), 119 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 24.5×19 சமீ.

கல்விப் பொதுத் தராதர உயர்தர விலங்கியல் பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்டுள்ள இந்நூலில், கரப்பான்-தேரை-மனிதன் ஆகிய மூன்று உயிரினங்களின் ஒப்பீட்டு உடலமைப்பியலும் உடற்றொழிலியலும் பற்றிப் பொதுவாகவும், இவ்வுயிரினங்களின் சுவாசத் தொகுதி, நரம்புத் தொகுதி பற்றி ஆழமாகவும் பன்னிரு அலகுகளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. பகுதி-1இல் சுவாசத்தொகுதி பற்றிய நான்கு அலகுகள், அறிமுகம், சுவாச மேற்பரப்புகளின் வகைகள், தரைவாழ் விலங்குகளில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் முறைகள், சுவாச உடற்றொழிலியல் ஆகிய தலைப்புகளின்கீழ் தரப்பட்டுள்ளன. பகுதி-2இல் நரம்பு இயைபாக்கம், நரம்புத் தொகுதி பற்றிய எட்டு அலகுகள் உள்ளன. இவை அறிமுகம், தாழ்ந்த விலங்ககளின் நரம்புத் தொகுதி, கரப்பானின் நரம்புத் தொகுதி, முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் நரம்புத் தொகுதி, தேரையின் மூளை, மனிதனின் மூளை, முண்ணாண், சுற்றயல் நரம்புத் தொகுதி ஆகிய தலைப்புகளின்கீழ் விளக்கப்பட்டுள்ளன. இறுதியாக மைய நரம்புத் தொகுதி-அடிப்படைப் பாங்கு பற்றிய ஒப்பீடும் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35399).

ஏனைய பதிவுகள்

Online slots For real Money

Articles Start To play 100 percent free Ports Today! Finest Real money Harbors To play Inside the 2023 Can i Download App To play? By

12442 – அகில இலங்கை தமிழ் மொழித்தினம் ; 1993.

தமிழ்மொழிப் பிரிவு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). (52) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ. கல்வி உயர்கல்வி அமைச்சின்