சி.கண்ணுச்சாமிப் பிள்ளை. பருத்தித்துறை: விநாயகர் தரும நிதியம், தெணியம்மன் வீதி, வியாபாரி மூலை, புலோலி மேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 1991. (உடுப்பிட்டி: ஸ்ரீவாணி அச்சகம், இலக்கணாவத்தை).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.
ஏறத்தாழ 320 பக்கங்கள் கொண்ட சித்தவைத்திய பதார்த்தகுண விளக்கம் என்ற நூல் தமிழகத்தின் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிபிள்ளை அவர்களால் பல காலங்களுக்கு முன் எழுதப்பட்டது. சிகிச்சாரத்ன தீபம், கண்ணுசாமியம், வைத்திய பதார்த்தகுண விளக்கம் (மூல வர்க்கம்) முதலிய நூல்களுக்கு ஆசிரிய ராகிய இவரது நூலின் சில பகுதிகளையும், வேறும் சில சித்த வைத்தியர்களினது நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களையும் தொகுத்து இந்நூலை, பருத்தித்துறை விநாயகர் தருமநிதிய ஸ்தாபகர் ஆ.சி.முருகுப்பிள்ளை ஆக்கியுள்ளதுடன் அதனைத் தனது தருமநிதியத்தின் 16ஆவது இலவச வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார். மூலிகை வைத்தியம் பற்றிய பதார்த்தகுண விளக்க நூலாக இந்நூல் அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21905.