ஹெமினியா டீ குஸ்மேன் லெடியன் (சிங்கள மூலம்), கே.துரைராஜா (தமிழாக்கம்). நுகேகொடை: இலக்பஹான பிரசுராலயம், இல. 8, தேவாலய வீதி, பாகொட, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நுகேகொடை: இலக்பஹான பிரசுராலயம்).
151 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
மருத்துவ மூலிகைகளின் வல்லமைக்கு வழிகாட்டியான இந்நூலினை திருமதி கே.துரைராஜா தமிழாக்கம் செய்திருக்கிறார். சாதாரணமான நோய்களும் அதற்கான சிகிச்சைகளும், தண்ணீர் சிகிச்சை முறைகள், மருந்துச் செடிகள், இயற்கைஆண்டவரின் வைத்தியன், மூலிகைகளைக் குறித்து வேதம், ஆலோசனைகள், கருத்துக்கள் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தமூலிகை வைத்திய நூல் இயற்கையின் குணமாக்கும் மூலகங்களைத் தெரிந்துகொண்டு அதன்படி சாதாரணநோய்களுக்குப் பரிகாரம் செய்துகொள்ளும் வழிவகைகளைக் கூறுகின்றது. இச்சிகிச்சைகளிலே பயன்படுத்தப்படும் தாவரங்கள் இலங்கைத் தெருவோரங்களிலும் தோட்டங்களிலும் எளிதில் கிடைப்பன. இலைகளும் பூக்களும் மரத்தண்டுகளும் அவிக்கப்பட்டு அல்லது இலைகளில் பிழிந்தெடுக்கப்பட்டுப் பெறப்படும் சாறுகள் சாதாரண நோய்களைக் குணமாக்கப் போதிய வல்லமைபெற்றிருந்தும் நாம் அதிக விலைகொடுத்து கடைகளில் செயற்கை மாத்திரைகளையும் வில்லைகளையும் களிம்புகளையும் பயன்படுத்துவதை இந்நூல்வழியாகக் கண்டிக்கும் இந்நூலின் ஆசிரியர், இயற்கை மருத்துவத்தில் வாசகரின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க இந்நூலைப் பயன்படுத்தியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20563).