ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி).
92 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 20.5×14.5 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், இசை நாடகங்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் (த.சிவகுமாரன்), நெறியாழ்கையும் பாணியும் (சே.இராமானுஜம்), ஒளியமைப்புக் கலை (தி.பாலசரவணன்), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு-07 (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), நாட்டுப்புறக் கலையில் நிகழ்த்துமுறை உருவாக்கம் (வ.ஆறுமுகம்), நாடகக் கலையை அறிவோம் (எஸ்.பி.ஸ்ரீனிவாசன்), நூல் நுகர்வு: நாடக வழக்கு (இ.ஜெயகாந்தன்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள், விமர்சனம்- கொல் ஈனுங்; கொற்றம் (யூ.பி.அ.றஞ்ஜித்குமார்), இரண்டு அஞ்சலிக் குறிப்புகள் (பாக்கியநாதன் அகிலன்), கூத்தின் புத்தாக்கத்திற்கான தேவையும் கொல் ஈனுங் கொற்றம் தயாரிப்பு அனுபவமும் (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), ஈழத்துத் தமிழ் நாடக அரங்கில் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை (அரங்கநேசன்), திருமறைக் கலாமன்றம் நடத்திய இசை நாடக விழா- 89 (தார்மீகி), அண்மைக்கால அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.