16385 மக்கள் களரி.

ரங்க மனுப்பிரிய (சிங்கள மூலம்), விண்மணி (தமிழாக்கம்). கோட்டே: ஜனகர்லிய வெளியீட்டகம், 238 A, ஸ்ரீஜயவர்த்தனபுர, 1வது பதிப்பு, 2021. (பத்தரமுல்ல: நெப்டியூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை).

xxvii, 242 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-624-5991-02-0.

மக்கள் களரி செயலாற்றுகை தரக்கணிப்பீடு தொடர்பான பகுப்பாய்வு ரீதியான கற்கை இது. மேம்போக்காக இந்நூல் மக்கள் களரி என்ற நாடக அமைப்பு ஆற்றிய பணிகளின் வரலாறு என்று தோன்றினாலும் ஆழமாக நோக்குமிடத்து இது மக்கள் களரி என்னும் சமூக இயக்கத்தின் வரலாற்றினூடாக இலங்கையின் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், சமூகம், வரலாறு, நாடகம், நடிப்பு போன்ற இன்னோரன்ன துறைகள் குறித்து ஆய்வுக்குட்படுத்தியுள்ள ஒரு வரலாற்றாவணமாகும். மக்கள் களரியின் அகநிலை நோக்கான இனங்களுக்கிடையிலேயான சமாதான சகவாழ்வுக் கோட்பாட்டினை இந்நூல் உரத்து ஒலிக்கின்றது. இலங்கை நாடக மற்றும் நடிப்புக் கலை, நடைமுறை நாடகக் கலை, மக்கள் களரி நடிப்புக் களம், மக்கள் களரியும் இனக்குழுமப் பிரச்சினைகளும், மக்கள் களரி அன்று முதல் இன்று வரை, மக்கள் களரி நாடகத் தயாரிப்பு, மக்கள் களரி மக்கள் சங்கமமாக, மக்கள் களரி உறுப்பினர்கள்ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிற்சேர்க்கைகளாக உசாத்துணை நூல்கள், மக்கள் களரி ஒரு சாத்தியமான இருப்பாக: மக்கள் களரி தொடர்பான நிகழ்வியல் கற்கை, வெண்கட்டி வட்டம்: மேடை நிகழ்வியல் மற்றும் இனக்குழுமம் பிரச்சினை, மக்கள் களரி பயணங்கள் பற்றிய வரவு செலவு அறிக்கை, உருவப் படங்கள் பட்டியல் ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Vulkan Las vegas Register Added bonus

Content America777 Gambling establishment No deposit Bonus Info and you may Criteria Different types of Free Spins Casinoer Uten Innskudd But if you take him