16387 கதை நேரம் கதைகள் : திரைக் கதைகள் (பாகம் 2).

பாலு மகேந்திரா. தமிழ்நாடு: வம்சி புக்ஸ், 19, னு.ஆ.சாரோன், திருவண்ணாமலை-1, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: மணி ஆப்செட்).

232 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80545-34-9.

தமிழகத்தில் தமிழ்த் திரைப்படத்துறையில் நன்கறியப்பட்ட ஈழத்தவரான பாலு மகேந்திரா, தமிழ்ச் சிறுகதைகளை சினிமாவுக்குள் கொண்டுவரும் நோக்கில் ‘கதைநேரம்” தொலைக்காட்சித் தொடரில் 20-25 நிமிடங்களுக்குள் நச்சென்று அழுத்தமான குறும்படங்களாகச் செய்யக்கூடிய 52 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒரு கதையாக தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பி வந்தார். அத்தொடரில் இருந்து தேர்ந்த சில கதைகளை 2008 ஜனவரியில் ”கதை நேரம் கதைகள்” என்ற தலைப்பில் முதற் பாகமாக வெளியிட்டிருந்தார். இதன் இரண்டாம் பாகமே இந்நூலாகும். இதில் சுஜாதாவின் ‘தாய்”, மாலனின் ‘தப்புக்கணக்கு”, சிவசங்கரியின் ”கடைசியில்”, வாஸந்தியின் ”நம்பிக்கை”, எஸ்.ஷங்கரநாராயணனின் ‘நிர்மலமான வானில் நட்சத்திரங்கள்’, சூரியனின் ‘கன்னத்தில் அறைந்தாலும்” ஆகிய ஆறு சிறுகதைகளும், அவற்றுக்கான திரைக்கதை பிரதிகளும் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15555 நதியில்லா ஓடம்.

கனகசூரியம் யோகானந்தன். திருக்கோணமலை: நர்த்தனா வெளியீட்டகம், இல. 101/8, கந்தசுவாமி கோவில் வீதி, 1வது பதிப்பு, 2018. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர). (7), 8-104 பக்கம், விலை: ரூபா