16389 திரைக்கண் : சில படங்கள் சில பார்வைகள்.

எஸ்.கிருஷ்ணமூர்த்தி. கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ.

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வதியும் எஸ். கிருஷ்ணமூர்த்தி, யாழ்ப்பாணம், இடைக்காடு கிராமத்தில் பிறந்தவர். சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம், பத்தி எழுத்துக்கள் என அவ்வப்போது எழுதிவருபவர். ‘உதயம்” (ஆங்கில-தமிழ் ) இருமொழிப் பத்திரிகையில் கிருஷ்ணமூர்த்தி தான் பார்த்த சினிமாக்கள் பற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். அவுஸ்திரேலியாவிலிருந்து நொயல் நடேசன், லெ.முருகபூபதி ஆகியோரால் ”உதயம்” பத்திரிகை சிலகாலம் வெளியிடப்பட்டுவந்தது. 2009 வரை அப்பத்திரிகையில் எழுதப்பட்ட திரைப்பட விமர்சனங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பள்ளிக்கூடம், வீராப்பு, வெயில், பொக்கிஷம், வெள்ளித்திரை, உன்னாலே உன்னாலே, கற்றது தமிழ், ராமேஸ்வரம், சிவாஜி, நான் அவனில்லை-நான் அவன் இல்லை, அம்முவாகிய நான், உளியின் ஓசை, மொழி, ஆனந்த தாண்டவம், யாவரும் நலம், நாடோடிகள், கன்னத்தில் முத்தமிட்டால், அலை பாயுதே, காஞ்சிவரம் ஆகிய திரைப்படங்கள் தொடர்பான விமர்சனக் கட்டுரைகள் இவை. ஏற்கெனவே ”மறுவளம்”, “நோ பால்” ஆகிய இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Utilize Rushing Betting On line

Content Points Affecting Winnings To your Pony Race Bets: winner betting football Navigating The best Horse Racing Betting Internet sites Away from 2024 Tips Wager