16391 மற்றும் பலர் நடித்த.

இ.சு.முரளிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-39-0.

தன்னைக் கவர்ந்த பன்மொழித் திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட குறுங் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலை ஆக்கியிருக்கிறார். தீம்புனல், ஜீவநதி, சஞ்சீவி, தினகரன், தெரிதல் ஆகிய இதழ்களில் இவை அவ்வப்போது வெளிவந்திருந்தன. ஜல்லிக்கட்டு, Blind, Driving Licence, Montage, Hotel Rwanda, Old Boy, Ikiru, In the fade, Perfume, Miracle in cell No Seven, Cold Eyes களை, பிரியாணி, இருபத்திநான்கு, புத்திகெட்ட மனிதரெல்லாம், அன்ரொய்ட் குஞ்சப்பன் வேர்ஷன் 5.25, மண்டேலா, பாங்சூ, வெடி மணியமும் இடியன் துவக்கும், த கிரேட் இன்டியன் கிச்சன், சார்பட்டா பரம்பரை, தொன்னூற்றாறு ஆகிய திரைப்படங்கள் பற்றிய பார்வைகளுடன், ‘என் பார்வையில் மலையாள சினிமா”, ‘ஃபஹத் பாசிலின் அற்புதமான அளிக்கையால் மிளிரும் திரைப்படங்கள் ஐந்து” ஆகிய சற்றே விரிவான இரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. முரளிதரனின் ஒவ்வொரு ஆக்கமும் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே என்ற உணர்வினையே வாசகரிடம் தோற்றுவிக்கின்றது. 219 ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Gambling with Bitcoin

Posts The way we Picked the best Gambling enterprises to possess Australian continent Ignition Local casino – Finest Crypto Internet casino Web site for Web