16398 சிறுவர் கவிச் சோலை: சிறுவர்களுக்கான கவிதைகள்.

அருளானந்தம் சுதர்சன். திருக்கோணமலை : பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2020. (திருக்கோணமலை: சிறீராம் அச்சகம் (ரிங்கோ பிரிண்டர்ஸ்), 158, தபால் நிலைய வீதி).

106 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4628-71-7.

கிழக்கிலங்கையில் வீரமுனையில் பிறந்த சுதர்சன், தனது ஆரம்ப, உயர்நிலைக் கல்வியை  வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விசேட துறை இளங்கலைமாணிப் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்தவர். சிறந்த கவிஞராகவும், கலைஞராகவும், உளவளத் துணையாளராகவும் பல பரிமாணங்களில் அறியப்பெற்றவர். இவரது முன்னைய கவிதைத் தொகுப்பு “சிறுவர் கவிப்பாக்கள்” என்ற தலைப்பில் 2018இல் வெளியிடப்பெற்றிருந்தது. இது அவ்வாண்டுக்குரிய அரச உத்தியோகத்தருக்கான ஆக்கத்திறன் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்டு முதலாம் இடத்தையும் வென்றிருந்தது. சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களது வாழ்வின் பாதுகாப்பு, முன்னேற்றம், கல்வி எனப் பலதரப்பட்ட விடயங்களைக் கருவாகக் கொண்டு இக்கவிதை நூலை உருவாக்கியுள்ளார். இதில் பாதுகாப்பாய் பள்ளி செல்வோம், காகம், புத்திசாலிச் சிறுவன், புதிய ஆத்திசூடி, என இன்னோரன்ன 38 சிறுவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Cloud Quest Slot Machine

Content Xbox App Für Pfiffig Tvs Xbox One X Zum Prime Day 2020: Die Besten Angebote Xbox Game Pass Mobile App Vr Oculus Quest 2: