16399 சிறுவர் பா ஏடு.

க.சத்தியபாமா. கொழும்பு 6: திருமதி கணபதிப்பிள்ளை சத்தியபாமா, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை).

xiv, 38 பக்கம், புகைப்படம், சித்திரம், விலை: ரூபா 860., அளவு: 24×18 சமீ.

கணபதிப்பிள்ளை சத்தியபாமா முரசுமோட்டையைச் சேர்ந்த நெடுந்தீவு முருகேசு-மீனாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். 34 வருடகாலம் ஆசிரிய சேவையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மாணவர்களது மொழி விருத்தி, கற்பனை விருத்தி, படைப்பாக்கத் திறன் விருத்தி, அழகியல் விருத்தி மற்றும் உடல், உள, ஆன்மீக மனவெழுச்சிசார் விருத்திக் கோலங்கள் அனைத்தையும் மேம்படுத்தும் உயரிய நோக்கில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நாமும் பாடசாலையும், எமது வீடு, தோட்டத்திற்கு வரும் பிராணிகள், நீருடன் விளையாட்டு, புத்தாண்டு பண்டிகைக்காலம், நாம் காணும் வானம், நாம் உண்பவையும் குடிப்பவையும், தகவல் கிடைக்கும் வழிகள், சுற்றுப்புறத்தில் நிகழும் மாற்றங்கள், எமது நல்வாழ்வு, எமக்கு தேவையானவை கிடைக்கும் வழிகள், பிரயாணம், ஒளியுடன்/வெளிச்சத்துடன் விளையாட்டு, மனிதர்கள் வேலை செய்யும் இடங்கள், சுற்றுப்புறத்தில் வெவ்வேறுபட்ட இடங்கள், எமது உதவி தேவைப்படுவோர் ஆகிய பதினாறு அத்தியாயத் தலைப்புகளின் கீழ் பல்வேறு சிறுவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

One act Takes on

Posts How to Relationship A nature Top Love Games Simple tips to Love Sam Coe Inside Starfield Exactly how Try Romance In the Listing From