12642 – கோ பெருஞ்செல்வம்.

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம்,
சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2017.
(யாழ்ப்பாணம்: ஆரணன் பதிப்பகம், மருதனார்மடம்).


x, 86 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-38483-1-4.


பசுவின் பெருமைபேசும் இந்நூல், பசுவின் மகிமை, நாட்டு மாடுகளின் சிறப்பு,
அந்நிய நாட்டு கலப்பின மாடுகள், திருமுறைப் பாடல்களில் பசு, பசுத்தானம்,
கோபூசை, பசுவுக்காக வாழ்ந்தோர், வீபூதி, பசுப்பாலின் மகிமை, மாடு பற்றிய
பழமொழிகள், காளை மாடுகள், ஆவுரஞ்சிக் கல், சவாரி மாடுகளின் நல்ல
இலட்சணங்கள், சவாரி மாடுகளுக்குரிய குற்ற அங்க அடையாளங்கள், பசு,
காளைகளுக்குரிய குற்ற அடையாளச் சுழிகள், விதியை மாற்றும் சுழிகளும்
சாஸ்திரங்களும், கண்ணனும் பசுக்களும், மாட்டுத் தொழுவத்தில் இயேசுபிரான்,
காமதேனுப் பசு, மாடுகளிலிருந்து கிடைக்கும் மகத்தான மருந்துகள், மாடுகளுக்கான
மருந்துகள், சூட்சுமமான சூட்டுக்கோல் குறிகள் ஆகிய 22 தலைப்புக்களில்
மாட்டினம் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூலில் நூலாசிரியர்
பதிவுசெய்திருக்கிறார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும்
அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான திருச்செல்வம்
தவரத்தினம் அவர்கள் எழுதிய நூல் இது.

ஏனைய பதிவுகள்

12120 – அபிராமி அந்தாதி.

அபிராமிப்பட்டர் (மூலம்). கொழும்பு 13: அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில், 105, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, புரட்டாதி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, ரகிசா கட்டிடம், 834 அண்ணா

Ad esempio Pestare Alle Slot

Content Gioca Nei Casinò Online Adm: Ramses Book soldi veri online Differenza Slot A sbafo Di nuovo Verso Denaro Veri Quale Pestare Alle Slot Machine:

16130 இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்.

வைகுந்தம் கணேசபிள்ளை. யாழ்ப்பாணம்: திருநெறிய தமிழ் மறைக் கழகம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). xxii, 112 பக்கம்,