16405 மான்குட்டி : சிறுவர் பாடல்.

தியத்தலாவ ர்.கு.ரிஸ்னா. கல்கிசை: பூங்காவனம் இலக்கிய வட்டம், 21- E, ஸ்ரீ தர்மபால வீதி, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, 2021. (மஹரகம: மிலெனியம் கிரபிக்ஸ்).

28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 24×17 சமீ., ISBN: 978-955-7775-01-2.

7-12 வயதெல்லையினருக்குப் பொரத்தமான சிறுவர் பாடல் நூல். வர்ணப்படங்களையும் உள்ளடக்கியதாக இந்நூல் கவர்ச்சிகரமான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. தியத்தலாவையை பிறப்பிடமாகக் கொண்ட இவரது தந்தை கே.எம். ஹலால்தீன் அவர்கள். தாயார் பீ.யூ. நஸீஹா அவர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்). ர்.கு.ரிஸ்னா  கஹகொல்லை அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது கற்றல் செயற்பாடுகளைத் தொடர்ந்தவர். தனியார் நிறுவனங்களில் கணினிப் பயிற்சிப் பாடநெறிகளை நிறைவுசெய்து, பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் இதழியல்துறை பாடநெறியைப் பயின்ற பின்னர் தற்போது கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணி புரிகின்றார்.

ஏனைய பதிவுகள்

12071 – சைவ போதினி-ஐந்தாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 7வது பதிப்பு, டிசம்பர் 1972, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1960, 2வது பதிப்பு, நவம்பர் 1961, 3வது பதிப்பு, ஜுலை 1964,