16411 கதை மரம் : சிறுவர் கதைகள்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

44 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-56-7.

வைத்தியர் எஸ்.பஞ்சகல்யாணி, புலோலி தெற்கு, பிலாவடித் தெருவைச் சேர்ந்தவர். சிறுவர்களை முன்நிறுத்தி இவர் எழுதும் மூன்றாவது நூல் இதுவாகும். சிறுவர்களுக்கு அவர்களது இளம் வயதிலேயே ஒழுக்கவியலை போதிப்பதாக இவரது படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூலில் தவளையின் குதூகலம், வண்ணத்துப் பூச்சியின் அம்மா, அம்மா யானை, பறவைகளின் அழகுராணிப் போட்டி, கரிக்குருவியின் ஆலோசனை, நிலாக்கதை, வகுப்பறை, ஏகாம்பரம் தாத்தா, தாத்தா கட்டிய பட்டம், குரங்குகளும் முதலையும், குரங்கும் குடிலும், மரங்களின் நண்பன், பூச்சிகளின் ஆசை, விடுகதைக் காடு, நண்டுகளின் திருவிழா, வாழையின் தலைக்கனம் ஆகிய 16 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 236ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Gamble NZ Actual Pokies 2024

Posts Unbelievable Slots Range – 5 reel online pokies Find special event incentives A casino slot games form which allows the video game to help