16413 சிந்தனை செய் : சிறுவர் கதைகள்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-23-9.

பறவைகளின் கூட்டம், வீமாவும் ஜிம்மியும், ஆடும் தேனியும், மானும் முயற்குட்டியும், வானத்தில் நடந்த அதிசயம், வேடனும் மானும், கொக்கும் காகமும், காட்டில் ஒரு வரிப்புலி, சிங்கராசாவின் பெருந்தன்மை, கிளியும் விளாம்பழமும், காகமும் குயிலும், மாம்பழக் குருவியின் நட்பு, வண்ணத்துப் பூச்சியும் தம்பியும், முதலையும் ஆமைகளும், குறும்புக்கார கோழிக்குஞ்சு, கடற்கன்னி, பூவரசும் தேக்கும், சர்ப்பத்தின் செருக்கு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 18 சிறுவர் கதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. கதைகளின் பாத்திரங்கள் நமது சூழலில் வாழும் விலங்குகளாக அமைவதுடன் அவை மானிட வாழ்வுக்கான போதனைகளை எளிமையாக வழங்குவதாகவும் கதைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பெரியோரைக் கனம் பண்ணுதல், நன்றியுணர்வு, விருந்தோம்பல், நட்பு போன்ற நற்பண்புகளை இக்கதைகள் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. மனிதனால் மாசுறும் பூமி பற்றியும் அவதானத்தை சில கதைகள் ஏற்படுத்துகின்றன. இந்நூல் 205ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Black-jack 21

Posts The top Free Black-jack Variants To experience For fun An educated Black-jack Internet sites Black-jack Principles For starters So it online credit online game