16416 சிறுவர் கதை மலர் : இதழ்2.

மாசில் பிரான்சிஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், 2/1, கோவில் வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி).

viii, 120 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-955-0210-08-4.

இந்நூலில் துயிலும் அழகி, உடன் பிறவா சகோதரர், ஊரார் சொல் கேட்ட தந்தையும் மகனும், அண்ணனை வென்ற தம்பி, பூனை தந்த செல்வம், குளம் சொல்லும் கதை, குறள் கதை, படித்தால் மட்டும் போதுமா?, பிரித்து ஆளுதல், மகாராஜாவின் புத்தாடை, வாய்ப்புக்களைத் தவறவிடலாமா?, சுட்டியின் குறும்பு, அல்பிறெட் நோபல், ஜக்கனும் அற்புத அவரை மரமும், சிந்தரெல்லா, இளைஞனும் இடையப் பையனும், தாத்தாவின் அறிவுப் பாடம், கடவுளைக் கண்டவன், அறிவும் நுண்ணறிவும், அம்மாவின் அழகிய கைகள், நன்றிக்கு நன்றி, தையற்கார சலீம் வீரனாகினான், அழகிலி வாத்துக் குஞ்சு, விகடகவியின் தந்திரம், பயனுள்ள அறிவுரை ஆகிய இருபத்தைந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. கதைகளுக்குப் பொருத்தமாக செல்வி எஸ். மாயாவின் சித்திரங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரி, இந்துக் கல்லூரி இரண்டிலும் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிய நூலாசிரியர் கனடாவில் வாட்டர்லூ பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70129).

ஏனைய பதிவுகள்

16366 நாம் : முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம் : பொன்விழா சிறப்பு மலர் 1964-2014.

செ.அன்புராசா அடிகள், தமிழ்நேசன் அடிகள் (தொகுப்பாசிரியர்கள்). மன்னார்: முத்தமிழ்க் கலா மன்றம், முரங்கன், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5