16420 சிறுவரின் சிந்தனைக்கு: இருபத்தியேழு சிறுகதைகள்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (மின்நூல் வடிவம்).

126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பௌதிகவியல் சிறப்புப் பட்டதாரியும், தொலைத் தொடர்பு பொறியியலாளருமான ஆசிரியர் எழுதிய சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டும் 27 கதைகள் இடம்பெற்றுள்ளன. என் அம்மா, வெளவால் மனிதன், யால ஜங்கில் கல்யாணம், நத்தார் பரிசு, அப்பா செய்த கணக்கு, சோம்பேறியின் சாதனை, மெலடியும் ரொபினும், மூன்று குட்டிச் சாத்தான்கள், தொலைந்த புத்தகம், துவண்டு விடும் அனிச்சா, அன்புள்ள ஆட்டுக்குட்டி, பூஜாவின் பூனைக்குட்டி, கரும்பலகையும் கணினியும், மௌனி டீச்சர், நடராஜாவுக்கு நல்ல மனசு, தெரு நாய், எனக்கு நேரமில்லை, குக்கூ கடிகாரம், அப்பாவின் பரிசோதனை, பொம்மை, கஸ்தூரியின் காலணி, நத்தார் தாத்தாவுக்கு ஒரு கடிதம், எனது பார்க்கர் 51 பேனா, கழுதையும் ராஜாவும், அணில் பிள்ளை, என் தம்பி, கழுகு மனிதன் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16265 ஹாட்லியின் சுவடுகள் : 175ஆவது ஆண்டு நிறைவு மலர் 1838-2013.

கே.அருளானந்தம், எஸ்.சிற்பரன் (மலர் ஆசிரியர்கள்). பருத்தித்துறை: ஹாட்லிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜ{லை 2013. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி). lxiv, 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

10021 இனிய நந்தவனம்: சசிபாரதி 80: முகமூடி இல்லாத மனிதர்.

த.சந்திரசேகரன் (ஆசிரியர்). திருச்சி 620 003: இனிய நந்தவனம், எண் 18, பெரிய செட்டித் தெரு, உறையூர், 1வது பதிப்பு, அக்டோபர் 2010 (திருச்சிராப்பள்ளி 620003: புதிய சித்திரா அச்சகம், இல. 5, மிஷன்