16432 என் உடல் என்னுடையதே.

நுவன் தொட்டவத்த (சிங்கள மூலம்), அனுஷா சிவலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 10: சமயவர்தன புத்தகசாலை, இல.61, ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர் வீதி (மாளிகாகந்த வீதி), மருதானை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 10: சமயவர்தன அச்சுப் பதிப்பாளர், இல. 53, ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர் வீதி, மாளிகாகந்த வீதி, மருதானை).

20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 670., அளவு: 28×22 சமீ., ISBN: 978-624-5713-21-9.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அவற்றிலிருந்து எமது குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையாக சிறுவர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தும் வழிமுறை முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இவ்வாறான ஆபத்துகள் குறித்தும் அவற்றிலிருந்து சிறுவர்கள் எவ்வாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் சிறுவயதிலேயே அவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு இச்சிறுவர் கதை நூல் பயன்படுகின்றது. வைத்தியர் நுவன் தொட்டவத்த எழுதிய இந்நூலுக்கான விளக்கச் சித்திரங்களை கட்புல, ஆற்றுகைக் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தின் மாணவியான சிந்துபமா சந்திரசேன வரைந்துள்ளார். தமிழ் மொழிபெயர்ப்பாளரான அனுஷா சிவலிங்கம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைத் துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Games Fandom

Articles Undetectable Mysteries: Titanic Titanic: The action kaufen The fresh detailed image and you may outlined bonus cycles get this slot a good specific container-checklist