16448 உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூர் அக்டோபர் 2011: மாநாட்டு மலர்.

நா.ஆண்டியப்பன் (மலராசிரியர்). சிங்கப்பூர் 969547: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், இல.182, Cecil Street , 04-10, TAPAC, 1வது பதிப்பு, ஓக்டோபர் 2011. (சிங்கப்பூர்: Percetakan Halus Sdn.Bhd).

xiv, 266 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2011ஆம் ஆண்டில் ஒக்டோபர் 28-30ஆம் திகதிகளில் நடாத்தி முடித்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர் இது. ‘முனைவர் கா.சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் இராம கண்ணபிரான் (சிங்கப்பூர்) அவர்களின் கட்டுரையும், ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்போம்” என்ற தலைப்பில் கம்பவாரிதி ஜெயராஜ் (இலங்கை) அவர்களின் கட்டுரையும், ஈழத்தவர்கள் தொடர்பான ஆக்கங்களாக இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவில் சுப.அருணாசலம், சித்ரா ரமேஷ், பொன் சுந்தரராசு, செ.ப.பன்னீர்செல்வம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். நிரல் குழுவில் (Conference Content Committee) அருண் மகிழ்நன், முனைவர் சேரன் உருத்திரமூர்த்தி, நாகலட்சுமி சிவசம்பு, மாலன், முனைவர் ரெ.கார்த்திகேசு, இராம கண்ணபிரான், நாராயணன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Implementing VDR for Deal Success

While VDRs have been traditionally employed to facilitate M&A transactions but they are now used for a myriad of business processes that require secure document

โบนัสคาสิโนออนไลน์ เว็บไซต์โบนัสที่ดีที่สุด กันยายน 2024

เนื้อหา การเล่นเกมอย่างมีความรับผิดชอบ กฎโบนัส ฉันจะถอนเงินรางวัลของฉันออกจากโบนัสของคาสิโนได้อย่างไร รหัสโบนัสที่มีข้อมูลประกอบด้วยคำแนะนำที่ชัดเจนเพื่อให้แน่ใจว่าคุณจะไม่พลาดโอกาสในการเพิ่มการเดิมพันของคุณมีโบนัสการสมัครคาสิโนออนไลน์จากผู้เชี่ยวชาญบางส่วนในสหรัฐอเมริกา คุณมีตัวเลือกมากมายหากคุณอยู่ในรัฐที่การพนันออนไลน์ถูกกฎหมาย เราได้เลือกโบนัสคาสิโนออนไลน์ที่ดีที่สุดบางส่วนในตารางใหม่ด้านล่าง แต่คุณจะไม่ผิดหวังกับโอกาสจากรายการทั้งหมดของเราด้านล่าง การเล่นเกมอย่างมีความรับผิดชอบ โบนัสต้อนรับใหม่ของ BitStarz เติมเงิน wm casino ประกอบด้วยฟรีสปิน 100 เปอร์เซ็นต์ 20 ครั้งโดยไม่ต้องฝากเงินสำหรับการสมัครสมาชิก และโบนัสชุด 100 เปอร์เซ็นต์สูงถึง $100 พร้อมฟรีสปิน 180