காசுபதி நடராசா, சீ.அமிர்தலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: பிரதேச செயலகம், மண்முனைப்பற்று, ஆரையம்பதி, 1வது பதிப்பு, ஜுன் 1996. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்).
iv, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
நொராட் நிதியுதவித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைந்த புனர்வாழ்வு புனரமைப்புத் திட்டத் தலைவரும் அரச அதிபருமான அ.கி. பாக்கியநாதன் அவர்களின் தலைமையில், திட்ட இணைப்பாளர் ஆர். சிவானந்தராசா அவர்களின் ஆலோசனையில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் மா.உதயகுமார் அவர்களின் வழிகாட்டலில் மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் அலுவலக நிர்வாக முகாமைத்துவ அறிவை மேம்பாடடையச் செய்வதற்காக மட்டக்களப்பு அரசினர் கலாசாலையில் 1995 டிசம்பர் 15-17 வரையும், 22-24 வரையும் இரு குழுக்களாக இடம்பெற்ற மூன்று நாள் வதிவிடப் பயிற்சி முகாமின் கருத்தரங்கின் தொகுப்பு நூல். மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பிரிவான ‘அலுவலகமும் செயற்பாடுகளும்” என்ற பிரிவில் அலுவலகம்-1: அமைப்பும் நிலையும் (சி. சண்முகம்), அலுவலகம்-2: உள்ளக ஒழுங்கமைப்பு (ப.கிட்ணபிள்ளை), அரச நிதிப் பிரமாணங்களும் நிதி நடைமுறைகளும் (கு.ஆறுமுகம்), அரச திணைக்களங்களின் குறைகளும் நீக்கும் வழிகளும் (ஞா.தேவஞானன்), கணக்காய்வும் ஐய வினாக்களும் நடவடிக்கையும் (கு.அருளானந்தம்), ஒழுக்காற்று நடவடிக்கைகள் (இரா.தியாகராசா), பொதுசனத் தொடர்பு (எஸ்.லோகநாதன்) ஆகிய கட்டுரைகளும், இரண்டாம் பிரிவான ‘திட்டமிடலும் அபிவிருத்தியும்” என்ற பிரிவில் திட்டமிடலும் முகாமைத்துவமும் (சா.ஜெயராம்), அபிவிருத்தி நிர்வாகம் (எஸ்.சண்முகம்), கிராம அபிவிருத்தியில் அரச ஊழியர் (ஆர். தியாகலிங்கம்) ஆகிய கட்டுரைகளும், மூன்றாவது பிரிவான ‘சேவைகளும் பயன்பாடும்” என்ற பிரிவில் புனர்வாழ்வு புனரமைப்பில் சமூகநல சேவை (ஜனாப் எம். எஸ்.பசீர்), வறுமை நிவாரண நிகழ்ச்சித் திட்டத்தில் உணவு முத்திரை (வி.எம்.பத்மநாதன்), சூழல் மாசடைதலும் அதனைக் கட்டுப்படுத்துதலும் (க. பிரேம்குமார்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பிற்சேர்க்கையாக வாழ்வோடு விளையாடும் மன அழுத்தம் (தெ.ஜெயராமன்) என்ற வீரகேசரி கட்டுரையின் மீள்பதிப்பும் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38775).