16450 காற்றுவெளி – கவிதைச் சிறப்பிதழ்.

ஷோபா (ஆசிரியர்). லண்டன் E13 0JX: முல்லை அமுதன், 34, Redriffe Road, Plaistow, 1வது பதிப்பு, ஜீலை 2006. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட், இல. 61, Hoe Street,  Walthamstow, London E17 4QR).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

‘கவிதைக் கலை” என்ற தலைப்பில் திருமதி விக்னா பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையுடன் தொடங்கும் இக்கவிதைச் சிறப்பிதழில் முனைப்பு (சிவரமணி), முகம் மறுக்கப்பட்டவர்கள் (மைத்திரேயி), இது காதல் பற்றிய குறிப்பு-2 (பைசால்), நியாயத்தின் நிசப்தம் (மோகனா), புதிய பரிமாணம் (அம்பலவாணன் புவனேந்திரன்), சவால் (பசுவய்யா), புதிய உணர்வுகள் (தங்கராஜா குமுதினி), சிந்தனை செய் (த.சு.மணியம்), திட்டவா (தாமரைத்தீவான்), வரம் வேண்டும் தாயே (சாந்தினி வரதராஜன்), அடையாளங்கள்-சில குறிப்புகள் (மாரி மகேந்திரன்), நாளைய நாள் எப்படியோ? (வண்ணை தெய்வம்), இப்போது தூங்கட்டும் (கூடலூர் ஆனந்தி), இலக்கிய தமிழ் வளவு (வேதா இலங்காதிலகம்) ஆகிய கவிதைகளும், கவிஞர் முல்லையூரான் பற்றிய நினைவுக் குறிப்பொன்றும், ஈழத்துப் பெண்கள் கவிதைகள் பற்றி சி.ரமேஷ்  ‘தெரிதல்” சிற்றிதழுக்கு எழுதிய கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Onde Posso Aparelhar Goddess Of Egypt

Content Jogo de slot jimi hendrix: Goddess of Egypt™ Arruíi Jackpot Paulatino Foi Mudado Por Conformidade Estátic Goddess Of Egypt Barulho mundo das máquinas de