16452 மேருபுரம் ஸ்ரீமஹா பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் கம்பன் விழா 2008 ஸ்ரீவித்யாபூஷன் விருது.

பிரம்மஸ்ரீ லிங்கசுரேஷ் குருக்கள், பிரம்மஸ்ரீ லிங்கரமேஷ் குருக்கள் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: மேருபுரம் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2008. (கனடா: கிரப்பிக் லாண்ட், Graphic Land Design and Print, 285, Progress Avenue, Unit No. 05, Scarborough).

(12), 86 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×17 சமீ.

இச்சிறப்பு மலரில் அமராவதி-கவிதை (சா.வே.பஞ்சாட்சரம்), ஆயிரம் கம்பர் வேண்டும்-கவிதை (நயினைக் கவிமணி சண்முகநாதபிள்ளை), கம்பரைப் போற்றுவோம்-கவிதை (துறையூரான் சின்னையா சிவநேசன்), மிடுக்குமிகு கம்பநாடன்-கவிதை (த.சிவபாலு), சுந்தரக் கவிஞன் தன் பைந்தமிழ்க் காவியம்-கவிதை (இராஜ்மீரா இராசையா), திருநாலாயிரத்தில் இராமகாதை (முருக வே.பரமநாதன்), தமிழரின் இசை மரபும் கம்பரும் (கௌசல்யா சுப்பிரமணியன்), அதர்மம் அழிய மானுடம் வெல்லும்-விபீஷணன் சான்று (இ.பாலசுந்தரம்), கம்பரின் நாடகக் கவிதைகள் (வி.கந்தவனம்), கம்பன் காட்டும் தோழமை (த.சிவபாலு), மஹாகவி கம்பனின் தத்துவமும் தனித்துவமும்-ஒரு திறனாய்வு நோக்கு (நா.சுப்பிரமணியன்), தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிச்சக்கரவர்த்தியாக விளங்கும் கம்பன் (எஸ்.சிவநாயகமூர்த்தி), கம்பன் காட்டும் வாழ்வியல் நெறிகள் (புதுவை இராமன்), கவியரசு கவிகளில் புவியரச பணிகள் (கனக மனோகரன்), கம்பன் தரும் படிப்பினை (ஈழத்துச் சிவானந்தன்), இலக்கியத்தில் கருவும் கவிநயமும் (சாமி அப்பாத்துரை) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பாக 2008இற்கான வித்யாபூஷன் விருதுகள் பற்றிய அறிவிப்பும் விருதாளர்கள் பற்றியகுறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16395 இளம் வளர்ந்தோர் இலக்கியம்.

சபா ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, ரு U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street)  vi, 106 பக்கம், விலை: ரூபா