12646 – தந்திரோபாய மனிதவள முகாமைத்துவம்(உயர்கல்விக்குரியது).

தனேஸ்வரி ரவீந்திரன். யாழ்ப்பாணம்: உயர்கல்வி நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 156 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21×15 சமீ.

நிறுவனங்கள் சிறந்த வினைத்திறனை அடைவதற்கு தொழில் வழங்குவோரும் முகாமையாளர்களும் மனித வளங்களை சரியான முறையில் முகாமைசெய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனால் இன்று மனிதவள முகாமைத்துவம் பிரபல்யம்பெற்ற ஒரு துறையாக வளர்ந்துள்ளது. தந்திரோபாய மனிதவள முகாமைத்துவம் (Strategic Human Resource Management) பற்றிய அறிவினை எட்டு அத்தியாயங்களில் இந்நூல் தந்திரோபாய மனிதவள முகாமைத்துவத்திற்கான அறிமுகம், ஊழியரது உரிமைகளை மதித்தலும் ஒழுக்காற்று முறைமையை முகாமை செய்தலும், தொழில் உறவுகளின் இயக்கங்கள், மனக்குறைகளை கையாளுவது தொடர்பான படிமுறைகள், வேலைத்தலத்திலான பாதுகாப்பும் ஆரோக்கியமும், ஊழியர் நலன்களும் சேவைகளும், ஊழியர் வேலையிலிருந்து விலகுதல் தொடர்பான முகாமைத்துவம், சர்வதேசரீதியான மனிதவள முகாமைத்துவம் ஆகிய தலைப்புகளின்கீழ் வழங்குகின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39451).

ஏனைய பதிவுகள்