16463 அம்மா காத்திருக்கக்கூடும்: க(வி)தை தொகுதி.

ஆ.முல்லைதிவ்வியன். வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு, கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, 2013. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்).

vi, 56 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 18×12 சமீ.

ஆனந்தமயில் முல்லை திவ்வியனின் மூன்றாவது நூல். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வல்வெட்டித்துறையில் பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தையார் த.ஆனந்தமயில்- ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி” என்ற சிறுகதைத் தொகுப்பை 2008இல் தந்தவர். தந்தையின் வழியில் தனயனும் ஒரு எழுத்தாளராகப் பரிணமித்துள்ளார். திறந்த பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கையைத் தொடரும் மாணவரான இவரது முன்னைய இரு நூல்களும் நல்லதோர் கனவும் அந்தரிப்போரும், கவியின் ஏக்கம் ஆகிய தலைப்புகளில் வெளிவந்துள்ளன. இக்கவிதை/கதைத் தொகுதியில் ‘கல்லூரி நிலா” முதல் ‘அன்புத் தோழியே” ஈறாக 23 கவிதைகளும் மூன்று குறுங் கதைகளும் அடங்கியுள்ளன. இக்கவிதைத் தொகுதியில் அடங்கியுள்ள சில கவிதைகள் காதல் கவிதைகள். சில போரின் முடிவுறாத் துயரங்களைப் பிரதிபலிப்பன. கவிஞனின் மண்மீதான நேசிப்பும், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் நோக்கும் பல கவிதைகளில் பளிச்சிடுகின்றன. காதல், ஆத்மா, மரம், சினேகிதி, டயறி, குருவி, அகதி, நினைவுகள், உறவு, துயர்கள், முள்ளிவாய்க்கால் வண்ணாத்திப் பூச்சி என்று இவரது பாடுபொருள்கள் நீண்டு பரந்தவை. பள்ளிக்குப் போக ஆசை, நாட்குறிப்பே, அம்மா காத்திருக்கக் கூடும் ஆகிய மூன்று கடுகுக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 196966).

ஏனைய பதிவுகள்

14072 நீறிருக்கப் பயமேன்: கட்டுரைத் தொகுப்பு.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). x, 125 பக்கம், விலை: ரூபா 250., அளவு: