16470 அன்புடைய நெஞ்சம் (கவிதை நெஞ்சங்கள்).

செ.லோகராஜா. மட்டக்களப்பு: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 14/3, A-4, கணக்குப்பிள்ளை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, கார்த்திகை 2021. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

xxviii, 54 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 325., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43127-9-1.

திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாலத்தடிச்சேனை கிராமத்தில் பிறந்தவர், செல்லத்துரை லோகராஜா. முன்னதாக மூன்று கவிதைத் தொகுப்புகளையும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும், இரு சோதிட நூல்களையும் வெளியிட்ட இவரது ஏழாவது நூல் இது. அன்புடைய நெஞ்சம், அன்பினில் உறவாகி, அழகிய ஓவியம் இங்கே, ஆகாய வெண்ணிலா, ஆசை நெஞ்சில் நீயிருந்தாய், ஆளப் பிறந்தவனே, இயற்கை வரைந்த ஓவியமே, உயிரினில் உறவானவளே, உன்னைச் சந்தித்தேன், உனக்கெனவே நான் பிறந்தேன், ஏற்றி வைத்த தீபமே, ஓருயிராய் ஒன்றானாய், கண்ணனிடம் கீதை கேட்டேன், கற்பகமாய் ஒளிர்ந்தேன், கனவினில் வந்தாய் நீ, கார்கால மேகமே, காற்றினிலே வரும் கீதமே, சொர்க்கமென நினைத்தாயோ?, திருமணமென்ற பந்தமே, நிலவைப் பிடித்தேன், நெஞ்ச நினைப்பில் நிறைந்தவளே, நெஞ்சில் நின்றது உன் மயக்கம், நெஞ்சோடு நெஞ்சாக நின்றாயே, பல்லோரும் போற்றும் பகலவனே, பேரழகான பெண்ணவளே, பொன்வண்டு மனத்திலா?, மஞ்சம் வந்த தென்றலே, மனதில் இடம் தாராயோ?, மேகத்தை விட்டிட்டு வா, வெண்ணிலா முகமெடுத்து ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 30 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16330 முதுமை என்னும் பொக்கிஷம்.

சு.குமரன், யாழினி சண்முகநாதன், பௌசிகா உருத்திரகுமார், க.கிருஷாந்தன். யாழ்ப்பாணம்: சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).