ஏ.ஈ.பீரிஸ். யாழ்ப்பாணம்: திருமதி விஜயா பீரிஸ், அன்பகம், புனித அந்தோனியார் வீதி, பண்டத்தரிப்பு, இணை வெளியீடு பண்டத்தரிப்பு: கதிரொளி நாடக மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
84 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-96026-0-1.
கவிஞர் ஏ.ஈ.பீரிஸ் அவர்களின் கவிதைகள் முப்பத்தைந்து தலைப்புகளில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அரச உத்தியோகத்தராகப் பணியாற்றியதன் காரணமாக அரச இயந்திரம் எவ்வாறு இயங்குகின்றது-அதன் சமூகப் பணிகளின் நன்மை தீமை என்பவற்றை நன்கு உய்த்துணர்ந்துள்ளார். ஒரு சமூக சேவகராக உழைத்து வருவதனால் சமூகத்தின்பாற்பட்ட பல்வேறு செயற்பாடுகள், உயர்வு தாழ்வுகள், சமூகக் கொடுமைகள் என்பவற்றையும் தனது கவிதைகளில் அடிநாதமாகக் கொள்ள முடிகின்றது. கிராமிய மணம் கமழும் பல கவிதைகள் வறுமைக்கோட்டில் வாழும் குடிமக்களின் அவலங்களைச் சுட்டி நிற்கும் காட்சிகளைக் கொண்டன.