16498 எனக்குப் பறவை நிழல்.

தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 600083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53 ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600083: விக்னேஷ் பிரிண்டர்ஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-87499-55-3.

“தமிழ் உதயாவின் கவிதைமொழி நமக்கு நெருக்கமாகவும் நமக்குள் நிகழ்வதுமாகவே உணர முடிகின்றது. பேரன்பைக் குறிவைத்து, அதன் பாதையிலேயே நகர்பவராக இருக்கிறார் தமிழ் உதயா. அன்புக்குத் தவித்து, அன்பில் தழைத்து, அன்பில் கரையவே விரும்புகிறார்” (பூமா ஈஸ்வரமூர்த்தி, அணிந்துரையில்). பள்ளிக்கூட விடுதியின் அறையில் இருந்து 12ஆவது வயதில் உணர்வும் தவிப்பும் தனிமையும் வழிந்த மனநிலையில் தனது முதல் கவிதையை இவர் எழுதியுள்ளார். பேசித்தீரா மௌனங்களையே கவிதைகளாக மொழிபெயர்த்திருக்கிறார். மல்லாவியின் மிக நீண்ட வயல்வெளிகளும் பாலியாற்றின் பதநீர் சுவை ஊற்றுகளும் ஆடிக்களித்த ஓடைகளும் நினைவில் நீங்காமல் சப்தமிட்டபடியே இருக்கின்றன எப்போதும். தனது  வாழ்க்கை தேம்ஸ் நதிக்கரையோரம் கரை ஒதுங்கினாலும் நினைவுகள் என்னவோ வன்னியின் சாலைப் பூக்களை மேய்ந்தபடியேதான் இருக்கின்றது என்கிறார்.

ஏனைய பதிவுகள்

14757 கலிங்கு 2003-2015 (நாவல்).

தேவகாந்தன். சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 644 பக்கம், விலை: இந்திய ரூபா 550., அளவு: