16549 நினைவின் இறுதிநாள்.

கருணாகரன். கிருஷ்ணகிரி மாவட்டம்: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டினம் 635112, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ.

வடக்கிலுள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்து தற்போது கிளிநொச்சியில் வசித்து வரும் கவிஞர் கருணாகரன், முன்னர் ஈழப்போராட்ட இயக்கங்களின் வெளியீடுகளான “பொதுமை” (ஈரோஸ்), ”வெளிச்சம்” (விடுதலைப் புலிகள்) ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சமூகச் செயற்பாட்டாளரான கருணாகரன், தற்போது சுயாதீன ஊடகவியலாளராகவும் மகிழ் பதிப்பகத்தின் வெளியீட்டாளராகவும் செயற்பட்டு வருகிறார். ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள், நெருப்பின் உதிரம், படுவான்கரைக் குறிப்புகள், இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவரும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

15402 நாடகமும் அரங்கியலும்: வினா-விடைத் தொகுப்பு.

எஸ்.ரி.அருள்குமரன். மல்லாகம்: புத்தாக்க அரங்க இயக்கம், கோவில் வீதி, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5சமீ. நாடகமும் அரங்கியலும் எனற பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில்