தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 600083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600083: விக்னேஷ் பிரிண்டர்ஸ்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-87499-52-2.
தமிழ் உதயா மல்லாவியில் பிறந்தவர். வவுனியா மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றியவர். ஈழத்தின் இரத்த வடுக்களையும் புலம்பெயர்தலின் மீளா வலிகளையும் உணர்ந்தவர். புலம்பெயர் மக்களின் மனதை அணுக்கமாகச் சொல்ல, அவர்களது வாழ்வின் அடர்த்தியை ஓவியமாய் வரைந்து காண்பிக்க, இழந்த கனவுகளின் வண்ணத்தை தன் சொற்களுக்கேற்றி அதை மானுட வரைபடத்தில் வரைந்து தந்திருக்கிறார். இலங்கை மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவரும் முன்னணி இலக்கிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. தமிழ் உதயா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவரது படைப்பாக்கம் பற்றிக் குறிப்பிடும்போது, “ஈரம் ததும்பி நிற்கும் சொற்களும், சொற்களில் வரைந்த காட்சிப் படிமங்களும் காட்சிப் படிமங்கள் உணர்த்தும் அனுபவச் சுழல்களும், அனுபவச் சுழலில் உழலும் உணர்வெழுச்சிகளும் தமிழ் உதயாவின் கவிதைகளை வாசிக்கும் யாவரையும் மனங்கொள்ள வைக்கின்றன. கவிதை காலத்தின் வழியே தமிழ் உதயாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது” என்கிறார் அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் உதயசங்கர்.