16558 பூக்காலம்.

வெலிமடை ரபீக். கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்., கலைமகள் வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 10: எஸ். அன்ட் எஸ். பிரின்டர்ஸ், 49, ஜயந்த வீரசேகர மாவத்தை).

xxiv, 85 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-0280-06-3.

எண்பதுகளில் கவிதை இலக்கியத்திற்குள் பிரவேசித்திருந்த கவிஞர்களுள் ஒருவரான ரபீக்கின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. மேக வாழ்வுக்குப் பின் வெளிவரும் பூக்காலம் அவரது இதயராகங்களை மீண்டும் மீட்டியுள்ளன. தினகரன் கவிதைச் சோலை, கவிதாசாகரம் ஆகிய களங்களினூடாகக் கவிதைகளைப் படைத்து வந்தவர் பின்னாளில்  கூர்மையடைந்த பேனா முதிர்ச்சியுடன் தொடர்ந்தும் வீரியத்துடன்  தன் எழுத்தாக்கங்களைப் படைத்த வருகிறார். “மேகத்தைப் போலவே வாழவிரும்பும் சகல மனிதர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மீட்டுவதாக மேகவாழ்வைப் பொழிந்த வெலிமடை ரபீக், சமூகத்தின் உயிர் அடிபடும் போதெல்லாம் வெடித்து விழும் வேதனைகளிலும் துடித்தெழும் உணர்ச்சிப் பிரவாகத்திலும் தன் கவிதைகளைப் பூவில் தோய்த்து வருடச் செய்கிறார். இந்த வருடல்களில் சுகத்துக்கும் அப்பால் வாசக மனசைப் பிராண்டிச் சுடும் கவிதைக் கனல் கொதிக்கின்றது” (முல்லை முஸ்ரிபாஅணிந்துரையில்). அகதி வாழ்வில் தொடங்கி யாசக ஒப்பாரி ஈறாக 35 கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

Bedste Internet

Content Roman legion $ 1 depositum 2024 – Lån Middel Tilslutte Taler Vi Forskellige Kærlighedssprog??? Bulletin Oven i købet, Idet Fungere Lykkes Tilslutte Rumænske Datingsider