16582 வரிகளில் நழுவும் கடல்.

கே.எல்.நப்லா. தெகிவளை: அ – பதிப்பகம், 05, Middle Way, Off Kawana Broadway, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (ராஜகிரிய: டிசைன் டெஸ்க்).

xii, 71 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5139-00-2..

நப்லா இலங்கையில் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் மற்றும் உளவியல், உளவளத்துணை கலைமாணிப் பட்டதாரி. தற்போது துணை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு ”கவிதை என்றான கிறுக்கல்கள்” 2013இல் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது தொகுப்பாகும். இத்தொகுப்பில் “முடிவில் ஒரு நிழல்” என்ற கவிதை தொடங்கி “நிழலை வரையத் தெரியும் எனக்கு” என்ற கவிதை ஈறாக நப்லா எழுதிய 52 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12530 நாட்டார் பாடல்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம், சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 12: பீனிக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், ழே.ஊ.பு.6, செபஸ்தியன் தொடர்மாடிக் குடியிருப்பு, புனித செபஸ்தியார் வீதி, குணசிங்கபுர). xii, 124 பக்கம்,