16675 துறவு.

க.தி.சம்பந்தன் (மூலம்). செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், க.முருகதாஸ் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2004. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

172 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 955-1013-07-7.

ஈழத்துச் சிறுகதைத்துறையின் வளர்ச்சிக்கு உரமூட்டிய திருமூலர்களுள் சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோருடன் க.திருஞானசம்பந்தனும் (க.தி.சம்பந்தன்) இணைந்து போற்றப்படுகின்றார். 1913இல் பிறந்த இவர் சம்பந்தன் என்ற பெயரில் படைப்புலகில் தன் 25ஆவது வயதில் அறிமுகமாகியவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் மாணவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய 16 சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு இந்நூலுருவாகியுள்ளது. தேர்ந்தெடுத்த சொற்களை வைத்துக்கொண்டு ஓரிரு கதாமாந்தர்களை நடமாடச்செய்து அற்புதமான கதைகளைப் படைப்பவர் இவர். இத்தொகுப்பில், மகாலக்ஷ்மி, மதம், சலனம், விதி, தூமகேது, இரண்டு ஊர்வலங்கள், அவள், துறவு, சபலம், பிரயாணி, மனிதன், தாராபாய், புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, கலாக்ஷேத்திரம், வாழ்வு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் கதைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Bucaneiros Cata

Content Como Abichar Arame Nas Máquinas Busca | Magnify Man Casino móvel Que Jogar Slots Criancice Casino Criancice Favor? Tudo Em Demanda Arruíi E Curado