12962 – பல்லவர் காலமும் பக்திக் கோலமும்.

க.நவசோதி. கொழும்பு: புத்தொளி வெளியீடு, 1வது பதிப்பு, பங்குனி, 1971. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தர் மேடு).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 11 சமீ.

க.நவசோதி அவர்களின் பல்கலைக்கழகச் சொற்பொழிவொன்றினை குறிஞ்சிக் குமரன் கோயில் நிதிக்காக புத்தொளி வெளியீட்டகத்தின் இரண்டாவது வெளியீடாக வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்லவர் காலத்தின் சிறப்பினைக் கூறும் சொற்பொழிவினைக் கொண்ட இந்நூலில் முதுநெறி, தமிழர் நெறி, அந்நியர் வருகை, பரசமய எழுச்சி, பரநெறிகளின் விளைவு, வள்ளுவனின் சமரசம், பக்திமார்க்க மறுமலர்ச்சி, ஆரியச் செல்வாக்கு, ஒற்றுமைக் குரல், எதிர்ப்பியக்கம், வர்க்கப் போராட்டமல்ல, மன்னரின் பக்திக்கோலம், கோயில்களின் எழுச்சி, முற்பட்ட காலக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள், இராசசிம்ம முறை, பக்திக் கலைகள், பக்தி இலக்கியம் ஆகிய பல்வேறு உபதலைப்புகளின்கீழ் இவ்வுரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2654).

ஏனைய பதிவுகள்