ஸ்ருவாட் பிகற் (ஆங்கில மூலம்), திருமதி ஞானம் இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
xiv, 356 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.
Stuart Piggot அவர்களால் எழுதப்பெற்று லண்டன் The Penguin Books Ltd நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற Prehistoric India என்ற நூலின் தமிழாக்கம் இது. ‘வரலாற்று முன்னர்’ என்ற தமிழ்ப் பதம் Prehistoric என்ற ஆங்கிலச்சொல்லுக்கான தமிழ் மொழிப் பிரதியீடாக இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று முன்னர் இந்தியக் காட்சி, ஆரம்பம்-இந்தியக் கற்காலம், பிற்களம்- மேற்கு ஆசியாவில் ஆதி விவசாயச் சமுதாயங்கள், மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி வேளாண் சமுதாயங்கள், சிந்து, பஞ்சாப் ஆகியவற்றின் நகர்கள், இடர் நிறைந்த காலமும் மாநகர்களின் முடிவும், மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்-ஆரியரும் இருக்கு வேதமும் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட இந்தியாவின் வரலாற்றை விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28261).