12987 – புதுவையாள்: பிரதேச பண்பாட்டு விழா மலர்: 2014.

வீ.பிரதீபன், இ.செல்வநாயகம் (மலராசிரியர்கள்). முல்லைத்தீவு: பிரதேச பண்பாட்டுப் பேரவை, பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 265 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23 x 16 சமீ.

இம்மலரில் புதுக்குடியிருப்பு வரலாற்றுக் கண்ணோட்டம், வரலாற்றுக் காலத்திற்கு முந்திய வன்னி நாடு, வன்னிவளநாட்டில் இந்து சமயம், வன்னிவளநாட்டில் நாச்சிமார் வழிபாடு, குடமூதற் கும்மி, முல்லைப் பிரதேச கூத்து மரபு, முல்லைத் தீவுக் கூத்து மரபு, புதுக்குடியிருப்பு புராதன சின்னங்கள், வன்னிப்பிரதேசத்தின் பொருளாதார முயற்சிகள், ஆக்க இலக்கிய வரலாறு கூறும் புதுக்குடியிருப்பு, தமிழ்மொழியில் புதுக்குடியிருப்புப் பற்றிய செய்திகள், வன்னிவள நாட்டார் பாடல்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் நீர்நிலைகள், முல்லை மாவட்டமும் சுதேச வைத்தியமும், போரின் பின்னரான கிராமிய மேம்பாட்டில் புதுக்குடியிருப்பு, வன்னியில் முயற்சியாண்மையும் அபிவிருத்தியும், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சமூக நாடகங்கள், முல்லைத்தீவுப் பிரதேச வழக்காறுகளும் சடங்குகளும், முல்லைத்தீவு மாவட்ட பாரம்பரிய வழிபாட்டு முறைகள், முல்லை மாவட்ட கிறிஸ்தவ வழிபாட்டு மரபு, புதுமை கண்ட புதுக்குடியிருப்பு அன்னை, புதுக்குடி யிருப்புப் பிரதேச உள்ளூர் வளங்கள், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியம், வளம் கொழிக்கும் புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்றின் மூங்கில் காடுசித்திரம், குருவிப்பள்ளு ஆகிய தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54717).

ஏனைய பதிவுகள்

Lastschrift & Bankeinzug chukcha Casino 2025

Content Welches interessante Spielsaal unter einsatz von Lastschriftverfahren finden – chukcha Casino Unter einsatz von Telefonrechnung inoffizieller mitarbeiter Erreichbar Kasino nach Bruchrechnung saldieren Fazit: Legale

12139 – ஞானகுரு.

ஆர்.கே.முருகேசு சுவாமிகள். நுவரெலியா: காயத்ரிபீட வெளியீடு, 82, லேடி மெக்கலம்ஸ் ட்ரைவ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை (சென்னை 6000024: ஏ.ஆர்.பிரின்ட்ஸ், 375-8, ஆர்க்காடு சாலை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: